விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறி புதிய சர்ச்சையை பாலிவுட் நடிகர் சல்மான் கான் உருவாக்கியுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் – சல்மான் கான் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சஜித் நதியத்வாலா தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணண் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 30ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மார்ச்.23) மும்பையில் நடைபெற்றது.
இப்படத்தில் இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நினைத்து சல்மான் கான் புதிய சர்ச்சை கிளப்பியிருப்பது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது .
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சல்மான் கான், "இதில் கதாநாயகிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, அவரது தந்தைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாதபோது, உங்களுக்கு என்ன தம்பி பிரச்சினை?. நாளை அவரது மகளுடன் கூட நடிப்பேன்.” என்றும் தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.