ரோஜா கோப்புப்படம்
சினிமா

12 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படத்தில் நடிக்கும் ரோஜா!

நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, 12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரிதாரம் பூசி நடிக்க வந்துள்ளார்.

PT WEB

நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, 12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரிதாரம் பூசி நடிக்க வந்துள்ளார்.

நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, 12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரிதாரம் பூசி நடிக்க வந்துள்ளார். 1992இல் வெளியான ’செம்பருத்தி’ திரைப்படத்தில் அறிமுகமான ரோஜா, ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தாய்மொழியான தெலுங்கு மட்டுமின்றி, மலையாளம், கன்னட மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2014ஆம்ஆண்டில் நகரி எம்எல்ஏவாக ஆந்திர அரசியலில் பங்களித்த அவர், 2015ஆம் ஆண்டு வெளியான, ’என் வழி தனிவழி’ படத்திற்குப் பிறகு, திரைப்படங்களில் நடிக்கவில்லை.

ரோஜா

இந்தநிலையில்தான், ’லெனின் பாண்டியன்’ என்ற திரைப்படத்தின் மூலம், மீண்டும் நடிக்க வந்துள்ளார். பாடலாசிரியர், இயக்குநர் உள்பட பன்முகத்திறமையாளரான கங்கை அமரன் நடிகராக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தில், சந்தானம் என்கிற கிராமத்து தாய் கதாபாத்திரத்தில் ரோஜா நடித்துவருகிறார்.