ரிதுராஜ் சிங்
ரிதுராஜ் சிங் கோப்புப்படம்
சினிமா

துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங் மரணம்; திரைத்துறையினர் இரங்கல்!

Jayashree A

பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ரிதுராஜ் சிங் (59) மாரடைப்பால் இன்று மரணம் அடைந்துள்ளார். இதை அவரது நண்பருமான நடிகருமான அமித் பெஹ்ல் என்பவர் உறுதிபடுத்தியுள்ளார்.

முன்னதாக ரிதுராஜ் சிங் கணைய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவர் இந்தி படங்கள் மட்டுமல்லாது, பல சீரியல்களிலும் பல்வேறு மொழி படங்களிலும் நடித்து மக்களின் மனதில் இடம்பெற்றவர். சமீபத்தில் அஜீத் நடித்த துணிவு படத்தில் ஒரு காட்சியில் நடித்து தமிழ்மக்களின் மனதிலும் இடத்தை பிடித்தவர்.

குறிப்பாக இவர் பனேகி அப்னி பாத், ஜோதி, ஹிட்லர் திதி, ஷபத், வாரியர் ஹை, ஆஹத், போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான யாரையன் 2-தான் இவரது கடைசி படம். அவர் இறப்பதற்கு முன், அனுபமா என்ற சீரியலில் யஷ்பால் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவரது இறப்பிற்கு பல்வேறு நடிகர் நடிகைகள் மற்றும் திரைத்துரையை சார்ந்தோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.