ரவி மோகனின் மூட நம்பிக்கை x
சினிமா

அடங்கப்பா.. இப்படி ஒரு மூட நம்பிக்கையா..? ரவி மோகன் பதிலால் அரங்கமே சிரிப்பலை!

பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் நடித்திருக்கும் கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகளவில் வரவேற்கப்பட்டு வருகிறது..

Rishan Vengai

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ’பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதியான நேற்றுமுதல் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது..

பராசக்தி

1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், அதில் நடித்திருக்கும் ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.

ரவி மோகன்

இந்தசூழலில் பராசக்தி திரைப்பட புரோமோஷனுக்காக நடிகர் ரவி மோகன் கொடுத்த நேர்காணல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தன்னிடம் உள்ள க்யூட்டான மூட நம்பிக்கை குறித்து ரவி மோகன் அளித்திருக்கும் பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு மூட நம்பிக்கையா..?

நடிகர் ரவி மோகன் உடனான நேர்காணலில் உங்களிடம் உள்ள க்யூட்டான மூட நம்பிக்கை குறித்து சொல்லுங்க என தொகுப்பாளினி கேட்க, அதற்கு வந்த ரவி மோகனின் பதிலை கேட்டு அரங்கத்திலிருந்து அனைவருமே சிரிப்பலையில் மூழ்கினர்.

தன்னிடம் உள்ள க்யூட்டான மூட நம்பிக்கை குறித்து பேசிய ரவி, நான் ஸ்கூல்ல படிக்கும்போது என் நண்பன் ஒன்னு சொன்னான் அதை இப்போவரை ஃபால்லோவ் பண்ணிட்டு இருக்கன். அவன் ஞாயிற்று கிழமைல சிகப்பு கலர்ல ட்ரெஸ் போடணும்னு சொன்னான், அதை இப்போ வரை ஃபால்லோவ் பன்றன் என்று கூறினார்.

அதை இன்னமும் ஃபால்லோவ் பண்றீங்களா? அப்போ ஷூட்டிங் போனீங்கனா என்ன பண்ணுவீங்க என்ற கேள்வி வர, உள்ளாடையை சிகப்பு நிறத்தில் அணிந்துவிடுவேன் என்று பதில் கூற அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

அதேபோல சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் வரும் ஹஹா ஹாசினி காட்சி உரையாடலை மீண்டும் ரவி மோகன் செய்ததும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.