வைரமுத்து x
சினிமா

தவெக குறித்த கேள்வி.. சட்டென வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!

தவெகவின் ஆறு மாத கால ஆட்சி குறித்து வைரமுத்துவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Rishan Vengai

தமிழ் சினிமா உலகத் தரத்துக்கு முன்னேறி, சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகமாக பங்கேற்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார். தமிழ் படங்கள் கதைச்செழிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த கவிஞர் வைரமுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ் சினிமாக்கள் அதிகமாக பங்கேற்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தொடர்ந்து தமிழ் படங்கள் அதிக முறை எல்லாத் திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த மாதிரி படங்கள், அதுவும் தென்னகத்திலிருந்து எடுக்கக்கூடிய இயக்குநர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். தமிழ் படம் தொழில்நுட்பத்திலும் கதைச்செழிப்பிலும் முன்னேறி இருக்கிறது என்று பொருள்.

வைரமுத்து

தொழில்நுட்பத்தில் தமிழ் படங்கள் இந்தியப் படங்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல. உலகத் தரத்துக்குத் தமிழ் சினிமாவை உயர்த்திப் பிடிக்க வேண்டுமென்று நம் தமிழ் கலை உலகம் பெரிதும் போராடுகிறது. அதில் நல்ல இயக்குநர்கள், நல்ல ஒளிப்பதிவாளர்கள், நல்ல நடிகர்கள் ஈடுபட்டுச் செய்கிறார்கள். இது போதாது; நாங்கள் 'பெரிதினும் பெரிது கேட்பவர்கள்'. இந்த விருதுகளும், இந்தத் திரையிடல்களும் தமிழ் படங்களுக்குப் போதாது. இன்னும் இன்னும் ஒவ்வொரு முறையும் தமிழ் படங்கள் 'ஆஸ்கர்' என்று முட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் தமிழ் படங்கள் உலகப் பட விழாக்களில் விருதுகளை வென்று வர வேண்டும். தமிழர்கள் கலைகளுக்குப் பெயர் போனவர்கள். தமிழர்கள் மொழியையே 'முத்தமிழாகப்' பிரித்தவர்கள். எனவே எல்லா கலைகளையும் விட தமிழ்க்கலை சிறந்தது என்று பெயரெடுப்பதுதான் தமிழ் திரைப்படத்தின் எதிர்காலத்திற்கு மகுடமாகும் என்று நான் நம்புகிறேன் என பேசினார்.

வைரமுத்து

தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், நடிகர்... இப்போ ஆறு மாசம் ஆட்சிக்கு வந்து கம்ப்ளீட் பண்றாரு. ஆட்சி எப்படி சார் இருக்கு? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு சட்டென திரும்பி பார்த்த வைரமுத்து வேற கேள்வி கேளுங்கள் என்று கூறி பதிலளிப்பதை தவிர்த்தார்.