Dorothy Onna Thottu Dorothy Onna Thottu / Sony Music South
சினிமா

இளையராஜாவின் ’ஒன்ன தொட்டு..’ வரவேற்பை பெற்ற ‘Dorothy' படத்தின் 3வது பாடல்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் டோரத்தி படத்திலிருந்து 3வது பாடல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

கார்த்திக் சுப்புராஜின் 10வது படமான ‘டோரதி’ 1990களின் மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி, டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்றுள்ளது. இளையராஜா இசையமைத்த ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ பாடல்களுக்கு பின், நேற்று வெளியான மூன்றாவது பாடல் ‘ஒன்னதொட்டு’க்கும் ரசிகர்கள் மத்தியில் சூடான வரவேற்பு கிடைத்துள்ளது; இன்று படம் திரைக்கு வந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவரவிருக்கும் படம் டோரதி. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

ilayaraja muthumani song

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக உருவாகியிருக்கும் டோரதி, இசைஞானி இளையராஜாவின் இசையில் 1990 காலத்தில் மதுரையில் நடைபெறும் கதைகளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் கல்யாண விருந்து, முத்துமணி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் 3வது பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

ஒன்னதொட்டு என பெயரிடப்பட்ட இந்தப் பாடலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிய எதிர்ப்பாரப்பை கிளப்பியிருக்கும் டோரதி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.