முதல் மூன்று நாட்களில் 325 கோடி ரூபாய் வசூலித்த ஜெயிலர் 2, தமிழ்சினிமாவின் முதல் ஆயிரம் கோடி திரைப்படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமேடி-ஆக்சன் கலவையுடன் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படம், வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பில் உள்ளது.
ஒருகாலத்தில் பாக்ஸ் ஆபிஃஸ்க்கு முன்னோடியாக இருந்த தமிழ்சினிமா, முதல் ஆயிரம் கோடி படத்தை கொடுக்க போராடிவருகிறது. பாலிவுட்டில் ஐந்து ஆயிரம் கோடி படங்களும், தெலுங்கு டோலிவுட்டில் நான்கு ஆயிரம் கோடி படங்களும், கன்னட சாண்டல்வுட்டில் ஒரு ஆயிரம் கோடி படமும் இருக்கின்றன. ஆனால் இன்னும் தமிழ்சினிமா தங்களுடைய முதல் ஆயிரம் கோடி திரைப்படத்திற்காக காத்திருக்கிறது.
இந்தசூழலில் ஜெயிலர் 2 திரைப்படம் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்யும் என நம்பப்படுகிறது. முதலிரண்டு நாட்களில் 209 கோடியை ஜெயிலர் 2 ஈட்டியுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், 3ஆம் நாளிலும் 100 கோடிக்குமேல் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வெளியாகியிருக்கும் தகவலின் படி முதல் நாளில் 130 கோடியும், இரண்டாம் நாளில் 85 கோடியும், 3ஆம் நாளில் 110கோடியும் என மொத்தம் 325 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று ஞாயிற்றுகிழமை என்பதால், இன்றைய வசூலும் 100 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை 5ஆம் நாளில் 500 கோடி வசூலை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2 திரைப்படம் குடும்பமாக பார்க்கக்கூடிய வகையில் காமேடி-ஆக்சன் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் ஆயுதபூஜை விடுமுறை நாட்களையும் சேர்த்து 7 நாளில் 800கோடி வரை வசூலிக்கும் என்றும், இது தொடர்ந்தால் நிச்சயம் 1000கோடி ரூபாய் வசூலை ரஜினி கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது.