மாருதி சுசுகி pt web
வணிகம்

Maruti Suzuki செய்த சம்பவம்| 35 ஆண்டுகளில் இல்லாத சாதனை...

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடந்த ஒரே நாளில் 80,000 விசாரணைகள் மற்றும் 30,000 டெலிவரிகளுடன் மாருதி சுசுகி நிறுவனம் கார் விற்பனையில் சாதனை படைத்துள்ளது

திவ்யா தங்கராஜ்

இந்தியாவின் முன்னணி 4 சக்கர வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி ஒரே நாளில் 35 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்துள்ளது. இதனையடுத்து, NSE-யில் அதன் பங்குகள் 3.2% வரை உயர்ந்து, 52 வார உயர்வாக ரூ.16,325 ஆக உயர்ந்தது. நவராத்திரி மற்றும் ஜிஎஸ்டி 2.0 ஆகியவற்றின் தொடக்க நாளில் இது வந்துள்ளது. என்ன விவரம் என பார்க்கலாம்.

ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 5%, 12%, 18% மற்றும் 28%-ல் இருந்து 5% மற்றும் 18% ஆக மட்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட சிறிய கார்கள், 1200 சிசி பெட்ரோல் அல்லது 1500 சிசி டீசல் என்ஜின்கள் கொண்ட கார்களுக்கு இப்போது 28% இல் இருந்து 18% ஆக வரி விதிக்கப்படுகின்றன. இதனால் கார்களின் விலை குறையும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

model image

ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளும் நவராத்திரி பண்டிகையின் தொடக்கமும் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களான மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களுக்கு ஒரு பண்டிகைக் காலப் பலன்களை அளித்துள்ளன. இரு நிறுவனங்களும் முதல் நாளில் வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளன.

அந்த வகையில், மாருதி சுசுகி நிறுவனம் அதன் வாடிக்கையாளர் செயல்பாட்டில் ஒரு எழுச்சியைப் பதிவு செய்துள்ளது. முதல் நாளிலேயே 80,000 விசாரணைகள் மற்றும் 30,000 டெலிவரிகளுடன் சாதனை படைத்துள்ளது. சிறிய கார்களுக்கான முன்பதிவுகள் கிட்டத்தட்ட 50% அதிகரித்தன. marketing and sales-ன் senior executive officer பார்த்தோ பானர்ஜி இதுகுறித்து பேசும்போது, கடந்த 35 ஆண்டுகளில் சிறிய கார்கள் பிரிவுக்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு காணப்படாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சிறிய கார்களுக்கான தேவை குறிப்பாக வலுவாக உள்ளது, முன்பதிவுகள் கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளன. மேலும் சில கார் வகைகளுக்கான கையிருப்பு கூட தீர்ந்து போகக்கூடும் என குறிப்பிட்டார். இதனை அடுத்து, NSE-யில் அதன் பங்குகள் 3.2% வரை உயர்ந்து 52 வார உயர்வாக ரூ.16,325 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 11,000 டீலர் பில்லிங்க்களை பதிவு செய்து, நவராத்திரியின் முதல் நாளில் 11,000 விற்பனையை எட்டியுள்ளது. இந்த உயர்வுக்கு பண்டிகை உணர்வு மற்றும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் நம்பிக்கை காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பண்டிகை காலம் முழுவதும் தேவை அதிமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்க்கப்படுகிறது