வெள்ளி  Pt web
மார்க்கெட்

தங்கத்தை விஞ்சும் வெள்ளி., 2025இல் தங்கம் விலை 75%, வெள்ளி விலை 130% ஏற்றம்... முக்கியத்துவம் ஏன்?

இந்த ஆண்டில் தங்கம் விலையுடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலை முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவத்தைப் இப்போது பெற்றுள்ளது ஏன்? என்பது பார்க்கலாம்...

PT WEB

2025ஆம் ஆண்டை மட்டும் எடுத்துக் கொண்டால் தங்கம் விலை 75 சதவீதம் உயர்ந்தது என்றால் வெள்ளியோ 130 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இப்போது அது 225 ரூபாயை தாண்டியுள்ளது. வெள்ளி விலை உயர்வுக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. வெள்ளி ஆபரண பயன்பாட்டைத்தாண்டி, தொழில்துறைக்கான அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ளது. சோலார் பேனல், மின்வாகனம், செமிகண்டக்டர் உள்ளிட்ட தயாரிப்புகளில் வெள்ளி இன்றியமையாததாக உள்ளதால், அதற்கான தேவை முன்னெப்போதைவிடவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. விளைவாக, அதன் விலை உச்சம் தொட்டு வருகிறது.

வெள்ளி விலை உயர்வு

வெள்ளியின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்ற நோக்கில் மக்கள் முதலீட்டை குவிக்கின்றனர். தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலை குறைவு என்பதால், சில்லறை முதலீட்டாளர்கள் எளிதாக வாங்க முடிகிறது. மேலும், டிஜிட்டல் முறையில் வெள்ளி ETF-களில் முதலீடு செய்வதும் இப்போது அதிகரித்துள்ளது.