21 ரூபாய் to 1 லட்சம்.. 100 ஆண்டில் தங்கம் கடந்துவந்த பாதை!
தங்கத்தின் விலை 1920-ல் 21 ரூபாயிலிருந்து 2024ல் 1 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. 100 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2020 முதல் 2025 வரை தங்கத்தின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. இது தங்கத்தின் மதிப்பு மற்றும் பொருளாதார மாற்றங்களை வெளிப்படுத்துகிறது.
1920ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு வெறும் 21 ரூபாய் மட்டுமே. 1955இல் இது 64 ரூபாயாக அதிகரித்தது. அதாவது 35 ஆண்டுகளில் 3 மடங்கு மட்டுமே தங்கம் விலை அதிகரித்தது. 1970இல் இது 144 ரூபாயை தொட்டது.
1980இல் தங்கம் விலை முதன் முறையாக 4 இலக்கங்களை தொட்டது. அப்போது ஆயிரம் ரூபாயாக இருந்த தங்கம் விலை 2006இல் 6 மடங்கு அதிகரித்து 6 ஆயிரம் ரூபாய் ஆனது. 2010இல் 15 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை 2020இல் இரட்டிப்பாகி 30 ஆயிரம் ரூபாயை தொட்டது.
2022இல் 37 ஆயிரம் ரூபாயாக இருந்த தங்கம் விலை 2024இல் 47 ஆயிரத்தை தொட்டது. இந்தாண்டு தொடங்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்ந்தது என்று கூறுவதைவிட பறந்தது என்று கூறுவதே சரியாக இருக்கும். தற்போது முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை தொட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல் தங்கம் விலை அதிகரித்துவிட்டது.

