Quant PSU Fund Direct
Quant PSU Fund Direct Quant
மார்க்கெட்

Quant PSU Fund Direct | NFO | குவான்ட் பொதுத்துறை நிறுவனங்கள் ஃபண்ட் பற்றிய முழு விவரங்கள்..!

மார்க் ஹௌஸி

முதலீட்டாளர்களின் விருப்பமான தேர்வாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. முதலீட்டாளர்களிடையே ஐ.பி.ஓ (IPO) மோகம் உள்ளதைப் போலவே, என்.எஃப்.ஓ (NFO) மோகமும் உள்ளது எனச் சொல்லலாம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிது புதிதாக வெவ்வேறு தீம்களில் தொடர்ந்து திட்டங்களை அறிமுகப்படுத்திவருகின்றன. அந்த வகையில், பிரபல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சார்பாக புதிதாக குவான்ட் பொதுத்துறை நிறுவனங்கள் ஃபண்டிற்கான என்.எஃப்.ஓ (Quant PSU Fund Direct - Growth NFO) பொதுச்சந்தா தற்போது தொடங்கியுள்ளது. இத்திட்டத்திற்கான பொதுச்சந்தா பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்திட்டத்திற்கு ஒதுக்கீட்டுத் தேதியாக பிப்ரவரி 15-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் , அதிக லாபம் ஈட்டிய மியூச்சுவல் ஃபண்ட்களில் PSU ஃபண்ட்கள் முதலிடம் வகிக்கின்றன. Aditya Birla Sun Life PSU Equity Fund Direct Growth (100.17%), Invesco India PSU Equity Fund Direct Growth (89%) என கடந்த ஓராண்டில் அதிக லாபம் ஈட்டிய பங்குகளில் PSU ஃபண்ட்கள் அதிகம். எனவே , Quant நிறுவனமும் இந்த வகை ஃபண்ட்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

திட்டத்தின் வகை:

இது பொதுத்துறை நிறுவனங்களின் துணைத் துறையில் முதலீடு செய்யும் திறந்தநிலை பங்குத் திட்டமாகும். இந்த ஃபண்ட் திட்டமானது நீண்ட கால மூலதன மதிப்பீட்டை உருவாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. மேலும், உள்நாட்டு பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களின் பலதரப்பட்ட பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த தயாரிப்பு பொருத்தமானது. இத்திட்டத்தின் நோக்கம், முக்கியமாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன மதிப்பீட்டை உருவாக்குவதாகும்.

குறைந்தபட்ச முதலீடு:

முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.5,000 முதலீடு செய்யலாம் மற்றும் அதற்கு மேல் ரூபாய் ஒன்றின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.

என்ட்ரி லோட் மற்றும் எக்ஸிட் லோட்:

இந்தத் திட்டத்தில் என்ட்ரி லோட் இல்லை. அதாவது முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் தங்கள் வருவாயை முதலீடு செய்ய எதையும் செலுத்த வேண்டியதில்லை. எக்ஸிட் லோடைப் பொறுத்தவரை, முதலீட்டின் அளவைப் பொருட்படுத்தாமல், யூனிட்கள் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் (எஸ்ஐபி/எஸ்டிபி உட்பட) மீட்டுக்கொள்ள / மாற்ற: 1 சதவிகிதம் வரை!

திட்டத்தின் சொத்து ஒதுக்கீடு:

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்களில் முதலீடு - குறைந்தபட்சம் 80 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 100 சதவிகிதம் வரை!

பொதுத்துறை நிறுவனங்கள் அல்லாத பங்கு மற்றும் பங்கு சார்ந்த பத்திரங்களில் முதலீடு - அதிகபட்சமாக 20 சதவிகிதம் வரை!

கடன் மற்றும் பணச் சந்தை கருவிகள் - அதிகபட்சமாக 20 சதவிகிதம் வரை!

வெளிநாட்டுப் பங்கு, பங்கு சார்ந்த கருவிகள் மற்றும் வெளிநாட்டுப் பரிமாற்ற வர்த்தகத் திட்டங்கள் - அதிகபட்சமாக 20 சதவிகிதம் வரை!

REITs மற்றும் InvITs ஆகியவற்றின் யூனிட்ஸ் - அதிகபட்சமாக 10 சதவிகிதம் வரை!

ஃபண்ட் மேனேஜர்ஸ்:


அங்கித் பாண்டே, சந்தீப் டாண்டன், வாசவ் சாகல், சஞ்சீவ் ஷர்மா ஆகியோர்.

ரிஸ்க்

திட்டத் தகவல் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி இந்தத் திட்டமானது “மிக அதிக ரிஸ்க்” கொண்டது. எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் நிதி ஆலோசகர்களின் அறிவுரைக்கேற்ப செயல்படவும்.