பட்ஜெட்
பட்ஜெட் முகநூல்
வணிகம்

பட்ஜெட்: வரவு செலவு எப்படி இருக்கு?

PT WEB

அரசாங்கத்திற்கு இரண்டு வழிகளில் வருமானம் கிடைக்கிறது. இதில் நாம் செலுத்தும் வரிகளை கொண்டு கிடைக்கப்படும் வருமானத்தினை நேரடி வருவாய் மற்றும் மறைமுக வருவாய் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.

நேரடி வரி வருவாய்:

தனிநபரோ அல்லது நிறுவனமோ அரசுக்கு நேரடியாக செலுத்தும் வரியின் மூலம் கிடைக்கும் வருவாய், நேரடி வரி வருவாய் எனப்படும். நேரடி வருவாய் என்பது ஒருவர் செலுத்தும் திறனுக்கு ஏற்ப மாறுபடும்.

உதாரணம்: தனிநபர் வருமான வரி, சொத்துவரி

மறைமுக வரி வருமாய்:

பொருள்களை உற்பத்தி செய்ய செலுத்துகின்ற கலால் வரி, சுங்கவரி, தொழில்வரி போன்றவை மூலம் கிடைக்கும் வருவாய், மறைமுக வரி வருவாய் எனப்படும்.

கிடைப்பட்ட புள்ளி விவரத்தின்படி,

நேரடி வரி வருவாய் (கணிப்பு)

2013 - 14 6.4 லட்சம் கோடி,

2023- 24 18.2 லட்சம் கோடி

இதன்படி 10 வருடங்களில் 1,00,000 கோடி கூடுதலாக வசூலாக வாய்ப்பு உள்ளது.

மறைமுக வரிவருவாய்:

2022 ஏப்ரல் - டிசம்பர் ஜிஎஸ்டி 13.40 லட்சம் கோடி

2023 ஏப்ரல் - டிசம்பர் ஜிஎஸ்டி 14.97 லட்சம் கோடி

2022 ஐ விட 2023 இல் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் உயர்வு வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுங்கவரி, உற்பத்தி வரி, வசூல் வரி ஆகியவை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதன்மூலமாக ஒட்டுமொத்த வரி வருவாய் என்பது ரூ.33.6 லட்சம் கோடி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 5 சதவீத வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

வரி அல்லாத வருவாய் (பொதுத்துறை நிறுவனங்கள்)

வரி அல்லாத வருவாயும் உயர வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. உதாரணம் என்எல்சி.

இதன்படி,

இலக்கு 2023 - 24 ஆம் ஆண்டில் வசூல் 3.00 லட்சம் கோடி,

ஆனால் 2023-24 வசூல் வாய்ப்பு 3.70 லட்சம் கோடி

அதாவது கூடுதலாக 23 சதவீதம் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதேசமயம் பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இதன் இலக்கு 51000 கோடி

கிடைப்பது 10000 கோடி

இருப்பினும் வருவாய் அதிகரித்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம்: இதனால் ஏற்பட்ட இழப்புகள் வரி நிர்வாகத்தினை நவீனமயமாக்கியது. இதனால் அனைவரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு, அதனால் அனைத்தையும் சரி செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத்தொடந்து ஏய்ப்புகள் குறைந்து வசூல் அதிகரிப்பு ஏற்படும். இதனால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நிதிப்பற்றாக்குறை ஏப்ரல் 2023 - அக்டோபர் 2023

வருவாய் 15.91 லட்சம் கோடி

செலவு 23.94 லட்சம் கோடி

பற்றாக்குறை 8.04 லட்சம் கோடி

இலக்கு: இதன்காரணமாக ஏற்பட்ட இழப்பினை நிதியாண்டு முடிகின்ற காலத்திற்குள் வருவாயை ரூ.17.87 லட்சம் கோடிக்குள் கட்டுப்படுத்தினால் இந்த பற்றாக்குறையை கட்டுப்படுத்தலாம்.

தொகுப்பு - ஜெனிட்டா ரோஸ்லின்