கைத்தறி நெசவு தொழில்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% ஆக அதிகரிக்கவுள்ள நிலையில், கைத்தறி கூட்டறவு சங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை கவுண்டம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “பொள்ளாச்சியில் கயிறு சார்ந்த தொழிற்சாலைகளில் அமைச்சர்களின் பெயரை குறிப்பிட்டு ஆளும் கட்சியினர் பணம் வசூலிக்கிறார்கள், இதுகுறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைத்தறி நெசவு தொழில்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% ஆக அதிகரிக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் கைத்தறி கூட்டறவு சங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன், மாநில அரசு சார்பாக முதல்வர் கோரிக்கை வைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.