GOLD REUTERS
தங்கம்

மீண்டும் ஷாக்.. திடீரென எகிறிய தங்கம் விலை! தற்போதைய நிலவரம் என்ன?

ஒரு வாரமாக குறைந்துவந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்து காணப்படுகிறது.

Rishan Vengai

சவரன் தங்கத்தின் விலை 1,080 ரூபாய் உயர்ந்து 92,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் விலை குறைந்த நிலையில், தங்கத்தின் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை சரிந்து காணப்பட்டது. இப்படியான சூழலில் கடந்த ஒரு வாரமாக கனிசமாக குறைந்த தங்கத்தின் விலை 92ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. அதவாது கடந்த 16 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 15,360 ரூபாய் வரை விலை குறைந்து காணப்பட்டது. இதனால், மக்கள் மீண்டும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

GOLD

இந்நிலையில் தான் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்றைய அப்டேட்டின் படி, சென்னையில் ஒரு சவரன் தங்கம் 1,080 ரூபாய் விலை உயர்ந்து 92,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,600க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.165 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,495க்கும், சவரனுக்கு ரூ.1320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.