தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தங்கம் வாங்குவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது வரலாற்றிலேயே முதன்முறையாக தங்கம் புதிய உச்சத்தை எட்டி மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நம் நாட்டில் தங்கத்தை முதலீட்டு பொருளாக மட்டும் பார்க்காமல் தங்கம் வாங்குவதை செண்டிமெண்ட் ஆக வைத்துள்ளனர். பண்டிகை காலம், வீட்டில் நடக்கும் விசேஷம் என எதுவாக இருந்தாலும் தங்கம் வாங்குவது இயல்பாக மாறிவிட்டது. ஆனால், தொடந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது சிரமமான ஒன்றாக மாறிவிட்டது.
முதன்முறையாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை ஐம்பதாயிரத்தை கடந்தது. அடுத்ததாக போன வருடத்தின் இரண்டாம் பாதியில் ஐம்பத்தி ஆறாயிரத்தை கடந்து விற்பனையானது. பின்பு அறுபது ஆயிரத்தை நெருங்கிய விற்பனையான நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே பேரிடியாக அறுபதாயிரம் என்ற புதிய உச்சத்தையும் தொட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை சவரன் அறுபத்தி இரண்டாயிரத்தை தாண்டியது. இன்றைய விலையில் மாற்றம் ஏற்பட்டு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 64,480 ரூபாயாக வந்தது. இப்படி இருக்க இன்று தங்கம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 8,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் எட்டாயிரத்தை கடந்து விற்பனையாவதால் தங்கம் நுகர்வோருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.