சிறு, குறு, நடுத்தர தொழில்கள் புதிய தலைமுறை
பட்ஜெட் 2025

மத்திய பட்ஜெட் 2025 | சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையினர் விடுக்கும் கோரிக்கைகள் என்ன?

மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையினர் விடுக்கும் கோரிக்கைகள் என்னென்ன? பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்:கௌசல்யா

இன்று தாக்கலாக இருக்கும் மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையினர் எதிர்பார்ப்பது என்னென்ன, அவர்கள் விடுக்கும் கோரிக்கைகள் என்னென்ன? பார்க்கலாம்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது சிறு, குறு தொழில்கள். 2024- 25ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் 45.79 சதவிகிதம் பங்களிப்பை இத்துறை வழங்கியிருப்பதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பல கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு என நாட்டின் முதுகெலும்பாக திகழும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை தற்போது பல பிரச்னைகளுடன் தள்ளாடிக் கொண்டிருப்பதாக துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். வாங்கும் திறன் குறைவு, பணம் கிடைப்பது அரிது, வரவேண்டிய பணம் தேக்கம், மூலப்பொருட்கள் விலையேற்றம், நிறுவனங்களை நடத்துவதற்கான செலவு அதிகரிப்பு, டாலர் மதிப்பு உயர்வால் இறக்குமதி செலவினங்கள் அதிகரிப்பு, கடன் வட்டி விகிதம் கூடுதலாக இருப்பது என பல பிரச்னைகளை சந்திப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இத்துறையை மீட்டெடுக்க அறிவிப்புகள் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் ரகுநாதன்.

வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்னையை களைவது என்பது சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கையில்தான் உள்ளது. எனவே, சிறு குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.