விவசாயிகள் வேதனை pt desk
விவசாயம்

நெல்லையை புரட்டிப்போட்ட கனமழை.. தண்ணீரில் பயிர்கள்.. கண்ணீரில் மக்கள்!

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பல நூறு ஏக்கரில் வாழை விவசாயம் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மருதுபாண்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பயிர்கள் சேதம் அடைந்திருக்கிறது. குறிப்பாக 65 ஹெக்டேர் பரப்பளவிலான வாழைகள் முழுமையாக சேதம் அடைந்தும், 150 ஹெக்டேர் பரப்பிலான வாழைகள் வெள்ளத்திலும் மூழ்கியுள்ளன.

நீரில் மூழ்கிய பயிர்கள் சேதம்

சேரன்மகாதேவி தாலுகாவிற்கு உட்பட்ட உதயமார்த்தாண்டபுரம், சக்திகுளம், கூலியூர், சேரன்மகாதேவி, பத்தமடை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வாழைகள் மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. 1117 ஹெக்டேர் நெல் மற்றும் 210 ஹெக்டேர் தானிய வகை பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

65 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை முழுவதும் சேதமடைந்துள்ள நிலையில், 159.4 ஹெக்டர் பரப்பளவிலான வாழைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிர் சேதம் தொடர்பான கணக்கெடுப்பு பணி இரண்டு நாட்களில் தொடங்கும் எனவும், வாழை பயிர்கள் பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.