தமிழ்நாடு
30அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து குதித்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
30அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து குதித்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
தேனியில் 30 அடி உயரமுள்ள கொட்டக்குடி ஆற்று பாலத்தில் இருந்து குதித்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் வடக்கு தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சின்னசாமி. இவருக்கு கடந்த சில மாதங்களாக குடும்பத்தினருடன் பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தேனி கொட்டக்குடி ஆற்றில் உள்ள பாலத்திற்கு வந்த சின்னசாமி, பாலத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.