சினிமா

3 நாட்களில் சாதனை... வியக்க வைக்கும் ‘பொன்னியின் செல்வன்’ வசூல்

சங்கீதா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 3 நாட்களிலேயே 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. வரலாற்று புனைவு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சோழர்களின் கதை என்பதால், பார்வையாளர்களால் விரும்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் 3 நாள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகம் முழுவதும் 3 நாட்களில் 202.87 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. முதல் நாளில் 78.29 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 60.16 கோடி ரூபாயும், 3-ம் நாளில் 64.42 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக இதுவரை 202.87 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

தமிழகத்தில் முதல் நாளில் 25.86 கோடி ரூபாயாக இருந்த வசூல், இரண்டாம் நாளில் சற்று சரிந்து 21.34 கோடி ரூபாயும், 3-ம் நாளில் 22.51 கோடி ரூபாயும் என மொத்தம் 69.71 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

குறிப்பாக பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்காவில் நல்ல வசூலை பெற்றுள்ளது. அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மணிரத்னம் படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக வசூலை பெற்றப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.