\
மழையில் நனைந்து  முளைக்கத் துவங்கிய நெல்மணிகள்: கவலையில் விவசாயிகள்

மழையில் நனைந்து முளைக்கத் துவங்கிய நெல்மணிகள்: கவலையில் விவசாயிகள்

மழையில் நனைந்து முளைக்கத் துவங்கிய நெல்மணிகள்: கவலையில் விவசாயிகள்
Published on

விழுப்புரம் அருகே இரண்டு நாட்களாக பெய்த மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கானை குப்பம் கிராமத்தில் இயங்கிவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை வியாபாரிகள் எடுத்துச் செல்லாததால், அடுத்தடுத்து விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அங்கேயே தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவை கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் நனைந்து மூட்டைகளில் இருக்கும் நெல்மணிகள் முளைக்கத் துவங்கிவிட்டன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com