வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று, புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது குறித்து புதிய தலைமுறைக்கு தெரிவிக்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன். அதன் விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...