அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து சிறந்த காளை மற்றும் காளையருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று நடைப ...