அவனியாபுரம் | இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்தது என்ன? முழு விவரம்!
செய்தியாளர் : ரமேஷ்
புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை ஆறு முப்பது மணிக்கு தொடங்கியது போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து சேர்த்து வைத்தார்.
இந்த நிலையில், காலையிலிருந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சீறிப்பய்ந்துவரும் காளைகளை காளையர்கர்கள் அடக்கும் காட்சிகளைக் காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். களைகளும் வெற்றியையும் காளையர்கள் வெற்றியையும் சேர்த்தே மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதில் மாடுபிடி வீரர்கள் 21 பேர், மாட்டு உரிமையாளர்கள் 17 பேர், பார்வையாளர்கள் ஆறு பேர், காவலர் 3 பேர் பத்திரிக்கையாளர் 1வருக்கு லேசான காயங்கள் என மொத்தம் 48 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒன்பதாவது சுற்றில் பங்கேற்ற மதுரை விளாங்குடியை சேர்ந்த நவீன் களத்தில் இருந்தபோது காளை மாடு நெஞ்சில் முட்டியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று முழுவதும் என்ன நடந்தது என்னும் முழு விவரத்தைக் கீழே இணைக்கப்பட்டுள்ள சுட்டியில் காணலாம்