படத்தின் க்ளைமாக்ஸ் உட்பட பல சிக்கல்களை விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினர். இப்போது அதை கருத்தில் கொண்டு படத்தில் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.
இது மிக நீண்ட பயணம். கோவிட் சமயத்தில் இந்தக் கதையை கேட்டேன். அங்கிருந்து எடுத்துக் கொண்டால் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இவ்வளவு காலம் பொறுமையாக ஒரு இயக்குநர் இருந்து நான் பார்த்ததில்லை.
அந்த சமயத்தில் அவர் மிகவும் மன ரீதியாக சோர்வானார். அப்போது என்னுடைய அலுவலகம், அவர் தங்கி இருந்த அப்பார்ட்மென்டுக்கு பின் பக்கம் இருந்தது. அவர் வீட்டில் இருக்கிறாரா என கேட்டுவிட்டு நேரில் சென்றேன்.