இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி அரேபிய அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காளதேசத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி, இந்தியாவை சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக்கின் பிரசாரத்தால், தான் தூண்டப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, ஜாகீர் நாயக்குக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டது. ஜாகீர் நாயக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு ஜாகீர் நாயக்கிற்கு தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே சம்மன் அனுப்பியது.
ஆனால் ஜாகீர் நாயக் இந்தியா திரும்புவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் சவூதி அரேபிய அரசு ஜாகீர் நாயக்கிற்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளதாக தெரிகிறது. சர்வதேச போலீசால் ஜாகீர் நாயக் கைது ஆவதை தவிர்க்கும் வகையில் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் தலையிட்டு, ஜாகீர் நாயக்கிற்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கியதாக அங்குள்ள ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.