’’ஏற்கனவே எச்சரித்துள்ளோம், இப்போதும் எச்சரிக்கிறோம்’’ - இளைஞர்களை எச்சரிக்கும் WHO!

’’ஏற்கனவே எச்சரித்துள்ளோம், இப்போதும் எச்சரிக்கிறோம்’’ - இளைஞர்களை எச்சரிக்கும் WHO!
’’ஏற்கனவே எச்சரித்துள்ளோம், இப்போதும் எச்சரிக்கிறோம்’’ - இளைஞர்களை எச்சரிக்கும் WHO!

உலகம் முழுவதும் இப்போது பல நாடுகளில் இளைஞர்கள் பெரும்பாலானோர் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் இளைஞர்கள் கொரோனோ பற்றிய விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம்.

 “சில நாடுகளில் இளைஞர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படுவதற்கு காரணம் அவர்கள் தங்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை குறைத்து கொள்வதுதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளோம், இப்போதும் எச்சரிக்கிறோம். இளைஞர்கள் ஒன்றும் வெல்ல முடியாதவர்கள் அல்ல. எனவே மற்றவர்கள் எப்படி  பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கிறார்களோ, அதையே இளைஞர்களும் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்” அதானோம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com