மரண தண்டனை வழக்கில் ஏமன் சிறையில் வாடும் கேரள பெண்.. மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது.
ஏமன், நிமிஷா பிரியா, டெல்லி உயர்நீதிமன்றம்
ஏமன், நிமிஷா பிரியா, டெல்லி உயர்நீதிமன்றம்ட்விட்டர்

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில் செவிலியாகப் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே அவர், தலால் அபு மஹதி என்பவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சி செய்த சம்பவத்தில், தோல்வியுற்ற நிமிஷா பிரியா, மஹதிக்கு மயக்க மருந்து செலுத்தி ஊசி மூலம் கொலை செயததாக அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது அந்நாட்டு போலீசாராலும் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு, இந்த வழக்கில், அந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்போதிலிருந்து அந்நாட்டுச் சிறையில் நிமிஷா உள்ளார்.

இதையும் படிக்க: உலகக்கோப்பை 2023: நெருங்க முடியாத ரன் வேட்டை.. தங்க பேட்டை 99% உறுதிசெய்த விராட் கோலி!

இதற்கிடையே, தன் மகள் நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார். இதற்காக ஏமனுக்குச் செல்ல தனக்கு அனுமதி வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவருடைய மனுவில், ‘அரபு நாடான ஏமனில் நடந்துவரும் உள்நாட்டுக் கிளர்ச்சி காரணமாக அங்கு இந்தியர்கள் செல்ல கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தடை நிலவுகிறது. இந்தத் தடையைத் தளர்த்தி தான் ஏமன் செய்ய வழிவகுக்க மத்திய அரசு உதவ உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றம்

அதனைப் பரிசீலித்த டெல்லி நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்தான் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

இதையும் படிக்க: இணையத்தில் வைரலான ஒசாமா பின்லேடன் கடிதம்.. டிக்டாக் செயலி மூலம் அமெரிக்காவைக் குறிவைக்கும் சீனா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com