கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு..! இவரின் தலையீடுதான் காரணமா?
கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா கடந்த 2008ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்று தனியாக கிளினிக் தொடங்குவதற்காக அந்நாட்டு சட்டப்படி உள்ளுறை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து 2014ம் ஆண்டு தனியாக கிளினிக் தொடங்கினார். ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிமிஷா கொடுத்த புகாரின் பேரில் மஹ்தி கைது ஏமன் நாட்டு காவல்துறையால் செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து மஹ்தி வெளியே வந்த பிறகு, நிமிஷாவை மிரட்டியதோடு அவருடைய பாஸ்போர்ட் ஒப்படைக்கவும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் செவிலியர் நிமிஷா கொடுத்த மயக்க மருந்து காரணமாக தலால் அப்தோ உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து நிமிஷா கைது செய்யப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு கொலை குற்றவாளி என தீர்ப்பளித்து மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏமன் நாட்டு உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த நிலையில் வரும் 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்நிலையில் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக நேற்றையதினம் அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிமிஷா பிரியாவை தூக்கிலிடும் தேதி நாளை (ஜுலை 16) என்ற நிலையில், அவரது தண்டனையை நிறுத்துவதற்கு இப்போது வேறு வழியில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதற்கு கடைசியாக ஒரு வழி பிறந்துள்ளது. கொலை செய்யப்பட்ட தலாலின் குடும்பத்தினருடன் மற்றொரு கலந்துரையாடல் நடைபெறுகிறது. தலாலின் நெருங்கிய உறவினரும், ஹுதைதா மாநில நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுமான ஷேக் ஹபீப் உமர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பார். நாளை நடைபெறவிருந்த தண்டனை விசாரணையை ஒத்திவைக்க அட்டர்னி ஜெனரலுடன் இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல அறிஞரும் சூஃபி ஷேக் ஹபீப் உமர் பின் ஹஃபீலின் தலையீட்டின் மூலம் தாலாலின் குடும்பத்தினர் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வற்புறுத்தப்பட்டு வருகின்றனர். ஒரு வேலை ப்லட் மணியை அக்குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டு நிமிஷாவிற்கு மன்னிப்பு வழங்கினால் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் நாடு திரும்ப வாய்ப்புள்ளது. கடைசி ஆயுதமாக நிமிஷாவின் குடும்பத்தினர் ப்லட் மணியை மட்டுமே நம்பியுள்ளனர். தற்கலிகமாக அவரது மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அவர்களது குடும்பத்தை சமாதானம் செய்து, மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காப்பாற்ற இன்னும் சில முயற்சிகளை எடுக்க கிடைத்திருக்கும் கால அவகாசமாகவே பார்க்கப்படுகிறது.