போர் பாதிப்பு : 10 லட்சம் குழந்தைகள் பட்டினி

போர் பாதிப்பு : 10 லட்சம் குழந்தைகள் பட்டினி

போர் பாதிப்பு : 10 லட்சம் குழந்தைகள் பட்டினி
Published on

போர் காரணமாக சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் வாடும் அவலம் ஏமனில் ஏற்பட்டுள்ளது. 

ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நீடித்து வருகிறது. தலைநகர் சனா உள்பட கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதிகளை மீட்பதற்காக சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ராணுவத்தினரும், ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக அந்நாட்டின் வான் எல்லை மற்றும் துறைமுகங்களை சவுதி அரேபியா மூடியுள்ளது. இதன் காரணமாக ஏமனுக்கு அத்தியாவசிய பொருட்கள் சென்று சேருவது தடைப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அதிகரித்து வரும் விலைவாசி, உணவுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை காரணமாக சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் வாடும் அவலம் ஏற்பட்டிருப்பதாக தனியார் தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. போர் காரணமாக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. சிலருக்கு கடந்த இரு ஆண்டுகளாக சம்பளமே வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஏமனுக்கு உதவிகள் கொண்டு செல்லப்படும் நுழைவுப் பகுதியான ஹுதெய்தா துறைமுகமும், போர் காரணமாக சேதமடைந்து வருவதால், மனித உரிமை ஆர்வலர்கள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com