அதே டெய்லர் அதே வாடகை பாணியில் ஆட்குறைப்பில் இறங்கிய நாஸ்டால்ஜிக் நிறுவனம்!

அதே டெய்லர் அதே வாடகை பாணியில் ஆட்குறைப்பில் இறங்கிய நாஸ்டால்ஜிக் நிறுவனம்!
அதே டெய்லர் அதே வாடகை பாணியில் ஆட்குறைப்பில் இறங்கிய நாஸ்டால்ஜிக் நிறுவனம்!

1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது யாஹூ நிறுவனம்.

ஒருகாலத்தில் இணைய உலகில் கொடிகட்டிப் பறந்த யாஹூ,  கூகுள் வருகைக்குப் பிறகு தன் வசம் இருந்த பயனர்களை இழக்கத் தொடங்கியது. கூகுளுக்கு நிகராக அனைத்து சேவைகளையும் வழங்கினாலும், யாஹூவால் கூகுளை முந்த முடியவில்லை. இருப்பினும் யாஹூ இணைய உலகில் தாக்குப்பிடித்து நின்று கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட், அமேசான், டிக்டாக், டிஸ்னி நிறுவனங்களை தொடர்ந்து தற்போது யாஹூ நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து யாஹூ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜிம் லான்சோன் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாஹூ நிறுவனத்தின் வணிக விளம்பர தொழில்நுட்ப பிரிவில் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் விளம்பர தொழில்நுட்ப பிரிவில் மட்டும் 20 சதவீதம் முதல் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது.

கொரோனா பரவல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கத்தால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக செலவினங்களை குறைக்கும் விதமாக கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நேற்று முன்தினம் 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் யாஹூவும் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com