எகிப்தில் கால் வைத்த ஜின்பிங் : அடியோடு சரியும் அமெரிக்க ஆதிக்கம் ! நடந்தது என்ன ?
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய இடத்தில் மத்திய கிழக்கு பகுதி (Middle East ) அமைந்துள்ளதால் இங்கு தனது ஆதிக்கத்தை செலுத்த அனைத்து வல்லரசுகளும் தீவிரம் காட்டி வந்துள்ளன. அந்த வகையில் மத்திய கிழக்கு பகுதியின் பல்வேறு நாடுகளில் நீண்ட ஆண்டுகளாக அமெரிக்கா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.
அங்குள்ள பல்வேறு நாடுகளில் அமெரிக்கா ராணுவ தளங்களையும் அமைத்துள்ளது. அப்படி ஆப்ரிக்கா, ஆசியாவை இணைக்கும் பகுதியில் உள்ள எகிப்து நீண்டகாலமாக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ உதவிகளைப் பெறும் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. உலக கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சூயஸ் கால்வாய் இங்கு அமைந்துள்ளதால் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவும் இங்கு தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே சீனா எகிப்தில் 10 பில்லியன் டாலருக்கும் அதிக அளவில் உள்கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. எகிப்தில் சீனாவின் இந்த முதலீடுகளுக்கு அமெரிக்கா முந்தையை காலங்களில் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே வெளிப்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping), எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியின் (Abdel Fattah el-Sisi) அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு (Cairo) சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
சீனா மற்றும் எகிப்து இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. எகிப்தின் கெய்ரோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அதிபர் ஷி ஜின்பிங்கை எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி நேரில் சென்று முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
சீனாவின் கனவு திட்டமான 'பெல்ட் அண்ட் ரோட்' (Belt and Road Initiative - BRI) திட்டங்களின் கீழ் எகிப்தின் சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் சீன முதலீடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, ஈரானுடன் நிதித் தொடர்பு வைத்துள்ள சீன மற்றும் எகிப்திய வங்கிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அண்மையில் எச்சரித்திருந்தது. ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் எகிப்து நேரடியாகவே சீன அதிபரை தங்கள் நாட்டுக்கு அழைத்துள்ள்ளது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருவதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

