அச்சுறுத்தும் கொரோனா: சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 908 ஆக உயர்வு

அச்சுறுத்தும் கொரோனா: சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 908 ஆக உயர்வு

அச்சுறுத்தும் கொரோனா: சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 908 ஆக உயர்வு
Published on

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குலுக்கு சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொள்ளாயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா ஆட்கொல்லி வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவியுள்ளது. சீனாவையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரஸால், இதுவரை அந்நாட்டில் 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே, பிலிப்பைன்சில் வசித்த சீனாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பல்வேறு நாடுகளில் 320-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கையைவிட, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராடி வரும் சீனர்களுக்கு இந்திய மக்கள் உறுதுணையாகவும், சிக்கலான தருணத்தில் ஆதரவாகவும் இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க சீனாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ள மோடி, கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com