ஆன்லைனில் டி-ஷர்ட் ஆர்டர் செய்தவரின் பார்சலில் நெளிந்த புழுக்கள் - வாடிக்கையாளர் அதிர்ச்சி
இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைனில் அவரவருக்கு பிடித்த பொருட்களை வாங்குவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆடைகள், மொபைல் போன்கள், அழகு சாதன பொருட்கள் என அனைத்தும் ஆனலைனில் தான் ஷாப்பிங் செய்கின்றனர்.
அதில் ஒருவர் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பென் ஸ்மிதி. அண்மையில் ஆன்லைன் மூலமாக தனக்கு பிடித்த நைக் பிராண்ட் டி-ஷர்ட்டை அவர் ஆர்டர் செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் ஆர்டர் செய்த டி-ஷர்ட்டும் பார்சலில் அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.
அதை ஆசை ஆசையை திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
‘நான் ஆர்டர் செய்த டி-ஷர்ட் வந்த பார்சலை திறந்து பார்த்த போது அதில் டஜன் கணக்கிலான புழுக்கள் நெளிந்தன. அதை பார்த்ததுமே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கூடவே குமட்டிக் கொண்டும் வந்தது. நைக் நிறுவனத்தை தொடர்பு கொண்டதற்கும் பதில் இல்லை. அதை பார்க்கவே அருவருப்பாக இருந்தது’ என ஃபேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார் அவர்.
இதற்கு நைக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதோடு அவரது டி-ஷர்ட்டையும் மாற்றிக் கொடுத்துள்ளது.