உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்டு வந்த எம்மா மொரானோ காலமானார். அவருக்கு வயது 117. இத்தாலியைச் சேர்ந்த மொரானோ 1899ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர்.
21-ஆவது நூற்றாண்டுவரை வாழ்ந்த இவர், 19-வது நூற்றாண்டில் பிறந்து உயிருடன் வாழ்ந்த கடைசி நபர் என்ற பெருமையை பெற்றவர். இரண்டு உலகப்போர்களை பார்த்துள்ள எம்மா மொரானோ, ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.