உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு புளோரிடாவில் சிக்கியது எப்படி? எந்த ஊரை சேர்ந்தது தெரியுமா?

உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு புளோரிடாவில் சிக்கியது எப்படி? எந்த ஊரை சேர்ந்தது தெரியுமா?

உலகின் மிகப்பெரிய மலைப்பாம்பு புளோரிடாவில் சிக்கியது எப்படி? எந்த ஊரை சேர்ந்தது தெரியுமா?
Published on

மிகப்பெரிய பர்மிய மலைப்பாம்பை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியிருக்கிறது. இது இதுவரை கைப்பற்றியதிலேயே அதிக எடைக் கொண்டது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் புளோரிடாவில் அதிக அளவில் மலைப்பாம்புகள் உலா வருவதால் அதனை தடுப்பதற்காக வன விலங்கு உயிரியலாளர்கள் திட்டம் ஒன்றினை தீட்டியிருக்கிறார்கள்.

அதன்படி, ஆண் மலைப்பாம்புகளில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொருத்துவதன் மூலம் அதிகளவில் முட்டியிடும் பெண் மலைப்பாம்புகளை கண்டறிந்து அவற்றை உற்பத்தி செய்ய விடாமல் தடுப்பதே அந்த திட்டமாகும்.

அதனை செயல்படுத்தும் விதமாக புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் வசித்து வந்த பெண் மலைப்பாம்பை ஒன்றினை பிடிக்க நிபுணர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அந்த மலைப்பாம்பு பிடிபட்டிருக்கிறது.

இதனையடுத்து ஆய்வு கூட்டத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில், 18 அடி நீளமும், 98 கிலோ எடையும் கொண்டதாகவும், அதன் வயிற்றிக் 122 முட்டைகள் இருப்பதாகவும் புளோரிடாவின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.

இனப்பெருக்க காலத்தில் அதிகளவிலான முட்டைகளை உற்பத்தி செய்த மலைப்பாம்பு என்ற சாதனையை கைப்பற்றப்பட்ட பாம்பு பிடித்திருக்கிறது என்றும், இது தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவை என்றும் புளோரிடா ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.

பர்மிய மலைப்பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்பு வகைகளில் ஒன்றாகும். கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய பர்மிய மலைப்பாம்பின் புகைப்படங்களை தென்மேற்கு புளோரிடா வன பாதுகாப்பு அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.

Also read: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com