“நேற்று 595 கிலோ..இன்று 291 கிலோ” - அதிரடியாக எடையை குறைத்த கின்னஸ் சாதனையாளர் !

“நேற்று 595 கிலோ..இன்று 291 கிலோ” - அதிரடியாக எடையை குறைத்த கின்னஸ் சாதனையாளர் !
“நேற்று 595 கிலோ..இன்று 291 கிலோ” - அதிரடியாக எடையை குறைத்த கின்னஸ் சாதனையாளர் !

600 கிலோ வரை உடலின் எடை கொண்டிருந்த மெக்சிகோவைச் சேர்ந்த கின்னஸ் சாதனை மனிதர், தன்னுடைய எடையை 300 கிலோ அளவில் குறைத்துள்ளார். 

மெக்சிகோவில் உள்ள அகுவாஸ்கேலினேட் பகுதியை சேர்ந்தவர் ஜூவான் பெட்ரோ பிராங்கோ. வயது 34. கடந்த 2016-ம் ஆண்டு 595 கிலோ எடை இருந்த பிராங்கோ, உலகின் அதிக எடை  கொண்ட மனிதர் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். 

எப்போதும் படுக்கையிலேயே இருந்த பிராங்கோவுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னை ஆகியவை அதிகமாக இருந்தது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான் உயிர்வாழ முடியும் என டாக்டர்கள் கூறியதையடுத்து  தன் சொந்த மாநிலத்திலிருந்து மேற்கு பகுதியில் உள்ள கவுடலராஜாவுக்கு குடிபெயர்ந்தனர். 

அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. பின்னர், இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தொப்பையை குறைக்கவும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. பின்னர் அவருக்காகவே பிரத்யேகமாக உடற்பயிற்சி கருவிகள் வடிவமைக்கப்பட்டன. அதை வைத்து தினமும் பயிற்சி மேற்கொண்டார். இதையடுத்து படிப்படியாக அவரது எடை குறைந்து வந்தது.  எடையை குறைக்க தொடர்ச்சியாக கடுமையான உடற்பயிற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார்.  

இந்நிலையில், தன்னுடைய எடையை 595 கிலோவில் இருந்து தற்போது 291 கிலோவாக குறைத்துள்ளார். கிட்டத்தட்ட 300 கிலோ அளவில் அவர் தன்னுடைய எடையை இழந்துள்ளார். தன்னுடைய எடையோடு சேர்த்து கின்னஸ் சாதனையையும் அவர் இழந்துள்ளார். ஆமாம், அதிக எடை கொண்ட மனிதர் என சிறப்பு தற்போது அவரிடம் இல்லை. 

இதுகுறித்து ஜூவான் கூறுகையில், “நான் 6 வயதாக இருக்கும் போதே 60 கிலோ இருந்தேன். பிறந்ததில் இருந்தே இது எடை உயர்வு என்பது என்னுடன் இருந்து வந்ததால், அது நோய் என்பதை உணர்ந்து கொண்டு நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். ஒவ்வொரு நாளும் உணவில் டயட்டை மேற்கொண்டு வந்தேன். ஆனால், ஒரு பலனும் கிடைக்கவில்லை. 17 வயதில் எனக்கு நடந்த கார் விபத்து ஒன்றிற்கு பிறகு மேலும், எடை கூடுதல் அதிகரித்தது.

இரண்டு வருடங்களுக்கு முடிவு எடுத்து எடை குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன். தற்போதுதான் என்னால் படுக்கையில் இருந்து எழுந்து நடக்க, உடைகளை உடுத்திக் கொள்ள முடிகிறது. மேலும் 138 கிலோ எடை குறைக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com