\
Underwater data centre , China
Underwater data centre , China web

உலகின் நீருக்கடியில் இயங்கும் முதல் தரவு மையம்.. சீனாவில் உருவாக்கம்!

லின்-காங் (Lin-gang) கடலோரப் படுகையில் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், 50க்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம் 95 விழுக்காடு மின்சாரத் தேவையைப் பெறுகிறது.
Published on

சீனாவின் ஷாங்காய் (Shanghai) நகரில், 'ஹைக்ளவுட்' (HiCloud) நிறுவனம் உலகின் முதல் நீருக்கடியிலான தரவு மையத்தை அமைத்துள்ளது. லின்-காங் (Lin-gang) கடலோரப் படுகையில் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், 50க்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம் 95 விழுக்காடு மின்சாரத் தேவையைப் பெறுகிறது. 24 மெகாவாட் (Megawatt) திறனில் 2,000 சர்வர்களுடன் (Servers) செயல்படும் இது, கடல்நீரைக் குளிர்விப்பானாகப் பயன்படுத்துவதால் மின் நுகர்வை 23 விழுக்காடு குறைக்கிறது; நன்னீர் பயன்பாட்டைத் தவிர்த்து, நிலப்பரப்புத் தேவையை 90 விழுக்காடு மிச்சப்படுத்துகிறது

underwater data centre, china
underwater data centre, china web

சீனாவின் ஏஐ (AI) தேவைகளுக்காகச் சீனா டெலிகாம் (Telecom) இதன் ஜிபியு கிளஸ்டர்களை (GPU clusters) நிறுவியுள்ளது. இந்திய மதிப்பில் 2,252 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள இத்திட்டம், கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டுக்கு வந்தது. 2030க்குள் 500 கிகாவாட் (Giga Watt) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை நோக்கி நகரும் இந்தியா, தன்னுடைய கிழக்குக் கடற்கரையில் கடல்சார் காற்றாலைகளையும் தரவு மையக் குளிர்விப்பையும் ஒன்றிணைக்க சீனாவின் இந்தத் திட்டத்தை வழிகாட்டியாகக் கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com