உலகிலேயே விலையுயர்ந்த பூச்சி வகை.. இதன் விலை எவ்வளவு தெரியுமா? இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

உலகிலேயே விலையுயர்ந்த பூச்சிகளில் ஒன்றாக கருதப்படும் பூச்சி வகை ஒன்று உள்ளது. அது என்ன? அதன் சிறப்புகள் என்ன என்பதை காணலாம்.
Stag Beetle
Stag Beetle faca book

உலகிலேயே விலையுயர்ந்த பூச்சிகளில் ஒன்றாக கருதப்படும் பூச்சி வகை ஒன்று உள்ளது. அது என்ன? அதன் சிறப்புகள் என்ன என்பதை காணலாம்.

Stag Beetle
ஈரான் அதிபர் தேர்தல்| அடுத்த அதிபராகிறார் மசூத் பெசெஷ்கியன் வெற்றி!

Stag Beetle என்னும் ஒரு வகை வண்டுதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விலை ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது. காரணம் என்னவென்றால், இது மிகவும் அரிதானது மற்றும் அதிர்ஷ்டமான வண்டு என்று நம்பப்படுகிறது.

இவற்றின் ஆயுள் காலம் என்ன?

லண்டனின் உள்ள இயற்கை அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, இவை 2-6 கிராம் எடை கொண்டவை. ஆயுட்காலம் 3-7 ஆண்டுகள்.

ஆண் வண்டுகளின் நீளம் 35-75 மி.மீ, பெண் வண்டுகளின் நீளம் - 30-50 மி.மீ. இவற்றின் இனப்பெருக்க காலங்களில் ஆண் வண்டுகள் அவற்றின் தனித்துவமான கொம்பு போன்ற தாடைகளை பயன்படுத்துகின்றன.

எங்கே காணலாம்

இவை குளிர் உணர்திறன் கொண்டவை என்பதால், சூடான் வெப்ப மண்டல சூழல்களில் காணப்படுகிறது. இறந்த மரங்களின் மரக்கட்டைகள், பாரம்பரிய பழத்தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற நகர்ப்புற பகுதிகளில் காணப்படுகின்றன.

எவற்றை உண்கின்றன?

இவை இறந்த மரங்களில் வாழ்வது போல இறந்த மரங்களில் உள்ள உணவுகளைதான் உண்கிறது. இதனால், ஆரோக்கியமான மரங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

இவை மரத்தின் சாறு, அழுகிய பழங்களில் உள்ள சாறு ஆகியவற்றை உணவாக எடுத்து கொள்கின்றன. இவற்றின் லார்வா காலத்தில் ஆற்றல் அதிக அளவு தேவைப்படுகிறது. இச்சமயம் பெறப்படும் ஆற்றல்தான் அவற்றின் பருவகாலங்கள் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

Stag Beetle
நெதர்லாந்து|14 ஆண்டுகால ஆட்சி.. இறுதி நாளன்று சைக்கிளில் எளிமையாக வெளியேறிய EX பிரதமர்.. #ViralVideo

ஸ்டாக் வண்டுகளின் லார்வாக்கள் இறந்த மரத்தை உண்கின்றன. இவைகளின் கூர்மையான தாடைகளை பயன்படுத்தி நார்ச்சத்துள்ள மரத்தின் மேற்பரப்பில் இருந்து சுரண்டி எடுத்து பிரித்தெடுத்து உண்கின்றன. என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com