டால்பின்களுக்கு டஃப் கொடுத்து அலைசறுக்கு செய்து அசத்திய வீராங்கனை! வியந்து பார்த்த சுற்றுலா பயணிகள்!

மார்கரெட் ரிவரில் கலைகட்டிய அலைசறுக்கு போட்டி.. காற்றின் வேகத்திற்கு அலைகள் வானுயர எழும்ப, அதில் வீரர், வீராங்கனைகள் அற்புதமாக சறுக்கி விளையாடி தங்கள் திறமையை வெளிகாட்டினர்.
அலைசறுக்கு போட்டி
அலைசறுக்கு போட்டிPT

ஆஸ்திரேலியாவில் ஆரவாரமாக நடைபெற்ற அலைசறுக்கு போட்டி, பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைந்தது.

ஆஸ்திரேலியாவில் உள்ள margaret river நகரில் உள்ள கடற்கரையில் உலக அலைசறுக்கு சாம்பியன்ஷிப் லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆடவர் மற்றும் மகளிருக்கென தனி தனிப் பிரிவுகளாக போட்டி நடத்தப்பட, பார்வையாளர்களும் அங்கு குவிந்தனர்.

அலைசறுக்கு போட்டி
"Historical Result" - கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார் தமிழக வீரர் குகேஷ்! புதிய வரலாற்றுச் சாதனை!

காற்றின் வேகத்திற்கு அலைகள் வானுயர எழும்ப, அதில் வீரர், வீராங்கனைகள் அற்புதமாக சறுக்கி விளையாடி தங்கள் திறமையை வெளிகாட்டினர்.

ஒவ்வொருவரும் அலையோடு விளையாடி சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தினர். அதிலும், Gabriela Bryan எனும் வீராங்கனை அலைசறுக்கில் அசத்தியபோது, அவருடன் டால்பின்களும் பயணம் செய்த காட்சி, காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. உற்சாக வெள்ளம் ஊற்றெடுத்த இந்த அலைசறுக்கு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com