ரொனால்டோ to ஜெர்மி ஜோர்டான் : பன்னாட்டு கம்பெனிகளை ஆட்டம் காண செய்த பிரபலங்கள்!

ரொனால்டோ to ஜெர்மி ஜோர்டான் : பன்னாட்டு கம்பெனிகளை ஆட்டம் காண செய்த பிரபலங்கள்!

ரொனால்டோ to ஜெர்மி ஜோர்டான் : பன்னாட்டு கம்பெனிகளை ஆட்டம் காண செய்த பிரபலங்கள்!
Published on

கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ யூரோ கோப்பை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின் போது மேஜை மீது இருந்த ‘கொக்க-கோலா’ குளிர்பானத்தை தூக்கிவிட்டு குடிநீர் பாட்டிலை எடுத்து முன் வைத்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு வர்த்தக ரீதியாக ஆட்டம் கண்டுள்ளது கோகோ-கோலா நிறுவனம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கோகோ-கோலா நிறுவனம் இழந்துள்ளதாம். 

இதேபோல், பிரபலமான பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் சிலவும், பிரபலங்களின் தரமான செய்கையால் ஆட்டம் கண்டு இருக்கின்றன. அது என்னென்ன நிறுவனங்கள் மற்றும் அந்த செயலை செய்த பிரபலங்களை குறித்து பார்ப்போம். அதில் சில சாதகம் மற்றும் பாதாகங்களாகவும் அமைந்துள்ளன.  

கெய்லி ஜென்னரின் ட்வீட்டும் ஸ்நேப்சேட்டுக்கு ஏற்பட்ட இழப்பும்! - அமெரிக்காவை சேர்ந்த மாடலான கெய்லி ஜென்னர் கடந்த 2018இல் ஸ்நேப்சேட் குறித்து ஒரு ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டால் தனது சந்தை மதிப்பில் சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தது ஸ்நேப்சேட். அதோடு பங்குச் சந்தையிலும் 6 சதவிகிதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது. “இனியும் யாராவது ஸ்நேப்சேட்டை ஓபன் செய்வார்களா? இல்லை நான் மட்டும்தானா... மொத்தத்தில் மிக வருத்தமாக இருக்கிறது” என அந்த ட்வீட்டில் அவர் சொல்லி இருந்தார். 

இதே போல பிரபல பாப் இசை பாடகி ரிஹான்னா ஸ்நேப்சேட் குறித்து விமர்சித்தார். அதனாலும் இழப்புகளை சந்தித்து ஸ்நேப்சேட். 

கிம் கர்தாஷியன் - ஆப்பிள் - அமெரிக்காவின் பிரபல ரியாலிட்டி ஷோ பிரபலமான கிம் கர்தாஷியன், ஆப்பிள் நிறுவனம் குறித்து செய்திருந்த ரீ-ட்வீட் ஒன்று அந்த நிறுவனத்திற்கு பங்குச் சந்தையில் சுமார் 37 சதவிகிதம் வீழ்ச்சியை கொடுத்தது. “வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது ஆப்பிள்” என அவர் ரீ-ட்வீட் செய்ததன் விளைவுகளின் எதிரொலியாக ஆப்பிள் இந்த வீழ்ச்சியை சந்தித்தது. 

ஜெர்மி ஜோர்டான் - Chipotle - நம் ஊர் முனியாண்டி விலாஸ் போல அமெரிக்காவின் செயின் உணவக நிறுவனமான Chipotle குறித்து நடிகர் ஜெர்மி ஜோர்டான் செய்த ட்வீட் அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, பிரிட்டன் மாதிரியான நாடுகளில் Chipotle மிகவும் பிரபலம். இந்நிலையில் ‘செத்து பிழைத்தேன்’ என நடிகர் ஜெர்மி ஜோர்டான் செய்த ட்வீட், Chipotle நிறுவனத்திற்கு பங்குச் சந்தையில் சுமார் 5.9 சதவிகிதம் வீழ்ச்சியை கொடுத்தது. 

யூரோ வீழ்ச்சியும் கிசெல் புண்ட்செனும் - வழக்கமாக அமெரிக்க டாலருக்கும், இந்திய ரூபாய் கரன்சிக்கும்தான் போட்டி பலமாக இருக்கும். ஆனால் கடந்த 2007இல் யூரோ, டாலர்களை ஓவர்டேக் செய்தது. அதனால் பிரபல மாடலான கிசெல் புண்ட்சென் தனது சம்பலத்தி யூரோவில் வழங்குமாறு பகிரங்கமாக தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் யூரோவை, டாலர் முந்தியது. அதற்கு கிசெல் தான் காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்தது. 

இதே போல ‘கங்கனம் ஸ்டைல்’ புகழ் பாடகர் சை-யின் பிரபலத்தால் அவரது தந்தையாரின் நிறுவனம் பங்குச் சந்தையில் நல்ல ஏற்றத்தை கண்டது. 

பிரபலங்கள் நினைத்தால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வர்த்தக ரீதியாக உயர்த்தவும், தாழ்த்தவும் முடியும் என்பது இந்த செய்கைகள் மூலம் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com