இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய பூ - 'பிணம் பூ' என அழைக்கப்படுவது ஏன்?

இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய பூ - 'பிணம் பூ' என அழைக்கப்படுவது ஏன்?
இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய பூ - 'பிணம் பூ' என அழைக்கப்படுவது ஏன்?

உலகிலேயே வழக்கத்திற்கு மாறான மிகப்பெரிய பூ ஒன்று இந்தோனேஷிய காட்டுப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாட்களுக்குக்கு மட்டுமே பூத்திருக்கும் இந்த பூவானது உலகிலேயே மிகப்பெரிய பூ என்ற பெருமையை பெற்றுள்ளது.

அரியவகை பூவான இது ராஃப்லேசியா அர்னால்டி (rafflesia arnoldii) என்று அழைக்கப்படுகிறது. இந்த பூவின் வீடியோவானது இந்தோனேஷியாவில் ட்ரெக்கிங் சென்ற நபர் ஒருவரால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூவின் வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. சிவப்பு நிற ராட்சத பூவான இதன் இதழ்களில் வெள்ளைப்புள்ளிகள் உள்ளன. இந்த பூ பெரிதாக இருப்பது மட்டுமல்லாமல், மற்ற பூக்களைவிட தனித்தே காணப்படுகிறது. அதற்உ காரணம் இதிலிருந்து வரும் விரும்பத்தகாத வாசனை. அதாவது கெட்டுப்போன இறைச்சியின் நாற்றத்தை இந்த பூ உமிழ்கிறது. இதனால் இந்த பூவை ’பிணம் பூ’ என்றும் அழைக்கின்றனர். இதுபோன்ற விசித்திரமான குணாதிசயங்களால் இந்த பூ இணையவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

‘’இது பார்க்கவே வேற்றுகிரக வாசிகள்போல் தெரிகிறது’’ என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். ‘’இதுகுறித்து ஒருவரும் எனக்கு பள்ளியில் கற்பிக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது’’ என மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

இந்த பிணம் பூ, ராஃப்லேசியா எனப்படும் ஒட்டுண்ணி பூக்கும் தாவரங்களின் பேரினத்தைச் சேர்ந்தது. இந்த குடும்பத்தில் 28 வகைகள் உள்ளன. இந்த குடும்பத்தில் ராஃப்லேசியா அர்னால்டி தான் மிகப்பெரியது. இது இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை பூர்விகமாகக் கொண்டது என்கின்றன அறிக்கைகள். இந்த பூவிலிருந்து வரும் துர்நாற்றமானது வண்டுகள் மற்றும் ஈக்களை ஈர்ப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com