\
World-Praised Indian Pilot The Story Behind Smith Machars Name
ஸ்மித் மச்சார்reuters

உலகமே புகழும் இந்திய கேப்டன்.. ஸ்மித் மச்சாரின் பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு!

கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பத்தினர் தற்போது மும்பையில் வசித்து வந்தாலும், அவர்களின் பூர்வீகம் குஜராத் ஆகும்.
Published on: 
Summary

மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு ஃபிளைதுபாய் விமானப் பயணிகளை காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை உலகம் புகழ்ந்து வரும் நிலையில், மறுபுறம் அவரது மச்சார் என்பதன் குடும்பப் பெயர் குறித்து இணையத்தில் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

துபாயிலிருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் போராடி, காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து, பயணிககளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். இதையடுத்து, உலகத் தலைவர்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

ஸ்மித் மச்சார்
ஸ்மித் மச்சார்reuters

அதேவேளையில் ஸ்மித் மச்சார் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிலும், ‘மச்சார்’ என அறியப்படும் அந்தப் பெயருக்கு பொதுவான இந்தி அல்லது உருது மொழியில் 'கொசு' என்றுதான் பொருள். ஆனால், ஒரு குடும்பப்பெயராக (Surname) இதற்கு வேறுபட்ட வரலாற்றுப் பின்னணியும் ஆழமான அர்த்தமும் உள்ளது. இதுகுறித்து இணையத்தில் பலரும் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, புகழ்பெற்ற குஜராத்தி அகராதியான 'பகவத் கோமண்டல் கோஷ்' தகவலின்படி, 'மச்சார்' என்ற குஜராத்தி சொல்லுக்கு ’வீரியம்’, ’உத்வேகம்’, ’மன உறுதி’ எனப் பொருள் கொள்ளப்படுகிறது. சிந்தி மற்றும் கட்ச் வட்டாரப் பகுதிகளில், கடல்சார் தொழில்கள் அல்லது மீன்பிடித்தல் சார்ந்த சொற்களிலிருந்தும் இப்பெயர் மருவி வந்ததாக சில வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், 'மச்சார்' என்பது குஜராத் மாநிலத்தின் பாரம்பரியமான ஒரு குடும்பப்பெயர் ஆகும். இது பிரதானமாக குஜராத்தின் நாகர் பிராமணர்கள் மற்றும் லோஹானா வணிகச் சமூகத்தவர்களிடையே காணப்படுகிறது. கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பத்தினர் தற்போது மும்பையில் வசித்து வந்தாலும், அவர்களின் பூர்வீகம் குஜராத் ஆகும்.

World-Praised Indian Pilot The Story Behind Smith Machars Name
ஃபிளைதுபாய் விமான சம்பவம் | விசாரணையில் வெளியான துணை விமானியின் பகீர் தகவல்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com