உலகின் 800 கோடியாவது குழந்தை எங்கு பிறந்துள்ளது? 5,6,7 பில்லியனாவது குழந்தை எது தெரியுமா?

உலகின் 800 கோடியாவது குழந்தை எங்கு பிறந்துள்ளது? 5,6,7 பில்லியனாவது குழந்தை எது தெரியுமா?
உலகின் 800 கோடியாவது குழந்தை எங்கு பிறந்துள்ளது? 5,6,7 பில்லியனாவது குழந்தை எது தெரியுமா?

உலக மக்கள் தொகை 800வது கோடியை எட்டியதாக கடந்த நவம்பர் 15ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இத்தோடு 2080ம் ஆண்டில் தான் உலகம் 1000 கோடி மக்கள் தொகையை கொண்டதாக இருக்கும் எனவும் ஐ.நா கணித்திருக்கிறது.

இதனிடையே உலகளவில் அதிகபட்ச மக்கள் தொகையை கொண்ட நாடுகளின் பட்டியலில் 141 கோடியே 20 லட்சம் எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, ஏறக்குறைய அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் இடத்தில் 142 கோடியே 60 லட்ச மக்கள் தொகையுடன் இருக்கும் சீனாவை முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கையால் பூமியில் இன்னும் என்னென்ன விளைவுகளெல்லாம் ஏற்படுத்துமோ என்றும் ஒருபுறம் பேசப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில், மனிதர்கள் வாழத் தகுதியான கோளாக இருக்கும் இந்த பூமியின் 800 கோடியாவது குழந்தை எங்கு பிறந்திருக்கிறது என்ற தகவல்தான் தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா என்ற பகுதியில்தான் 8வது பில்லியன் குழந்தை நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு 1.29 மணிக்கு பிறந்திருக்கிறது.

இது தொடர்பாக மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் தாய் சேயின் புகைப்படங்களோடு, 8 பில்லியனாவது மனிதராக பிறந்திருப்பதால் அதனை கொண்டாடும் வகையில் கேக்கும் வெட்டப்பட்டிருக்கிறது. அந்த பெண் குழந்தைக்கு வினிஸ் மபன்சக் என பெயரும் இடப்பட்டிருக்கிறது.

800 கோடியாவது குழந்தை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், 5,6,7 பில்லியனாவது குழந்தைகள் குறித்த விவரங்கள் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி, உலகின் 500வது கோடி குழந்தை குரோஷியா நாட்டில் 1987ம் ஆண்டு பிறந்திருக்கிறது. மாதேஜ் காஸ்பர் என்ற அந்த நபர் தற்போது கெமிக்கல் இன்ஜினியராக குரோஷியாவின் ஸாக்ரெப்பில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

அதேபோல 600வது கோடி குழந்தையாக அட்னான் மேவிக் என்பவர் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா-ஹெர்ஸேகோவினாவில் 1999ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்திருக்கிறார். 7 பில்லியனாவது குழந்தை 2011ம் ஆண்டு வங்கதேசத்தின் தாக்காவில் பிறந்திருக்கிறது. சாடியா சுல்தானா ஒஷீதான் 700வது கோடி குழந்தையாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com