\
World Population Could Halve by 2065, Study Warns
மக்கள் தொகை Ai

2065இல் மக்கள்தொகை பாதியாகக் குறையும்? மிலன் பல்கலைக்கழக நிபுணர்கள் கணிப்பு!

2065 ஆம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை தற்போதுள்ளதில் பாதியாக குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.
Published on

உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மேலும் தீவிரமடைந்தால், 2064-ஆம் ஆண்டுக்குள் உலக மனித மக்கள் தொகை பாதியாக குறையக்கூடும் என இத்தாலியின் மிலான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் அலெசியோ சக்கோன் முன்வைத்துள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மிலான் பல்கலைக் கழகம்
மிலான் பல்கலைக் கழகம்Pt web

அலெசியோ சக்கோன் மற்றும் லண்டனிலுள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவரது மறைந்த சக ஆய்வாளர் கோஸ்ட்யா ட்ராசென்கோ இணைந்து “Global population crisis scenarios predicted by a general nonlinear dynamical model” என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, தற்போது உலகளவில் 830 கோடி பேர் வசிப்பதாகவும் 4 காரணங்களால் மக்கள்தொகை இன்னும் 40 ஆண்டுகளில் பாதியாக குறையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பருவநிலை மாற்றம், பெருந்தொற்றுகள், போர்கள், அடிப்படை வளங்கள் பற்றாக்குறை ஆகிய 4 காரணங்களால் மக்கள் தொகை குறையும் என மிலன் பல்கலைக்கழக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 12 ஆயிரம் ஆண்டு மனிதகுல வரலாற்றை ஆய்வு செய்து கணிதவியல் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்ததாக நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

World Population Could Halve by 2065, Study Warns
மீண்டும் தொடங்கிய ஈரான் போர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா! அழிந்துபோன அதிநவீன ட்ரோன்கள்.!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com