டிரம்ப் முடிவுக்கு உலக அளவில் எதிர்ப்பு

டிரம்ப் முடிவுக்கு உலக அளவில் எதிர்ப்பு

டிரம்ப் முடிவுக்கு உலக அளவில் எதிர்ப்பு
Published on

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பதற்கு உலக அளவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. 

டிரம்பின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் டிரம்புக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட அமெரிக்கத் தலைவர்களுக்கும் எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கிறார்கள். 
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரேஸ் உள்ளிட்டோர் டிரம்பின் முடிவு பொறுப்பற்றது என்று கூறியிருக்கிறார்கள். எனினும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலரும், நிலக்கரி உற்பத்தியாளர்களும் அவர் முடிவை ஆதரித்திருக்கிறார்கள். 
2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த பருவநிலை மாநாட்டில் தொழில்மயமாக்கலுக்கு முந்தைய வெப்பநிலையில் இருந்து 2 டிகிரி செல்சியஸுக்குள் பூமியின் வெப்பநிலையைக் வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த உடன்பாட்டில் அமெரிக்கா உள்பட 187 நாடுகள் கையெழுத்திட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com