உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்

உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்
உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி: உலக வங்கி ஒப்புதல்

உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 

போர் காரணமாக உக்ரைனின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீள இதுவரை அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு அறிவித்துள்ள உதவித்தொகையின் ஆயிரத்து 200 கோடி டாலரை கடந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியுதவி கடன் மற்றும் மானியம் என இரு வகைகளில் வழங்கப்படும் என்றும் உலக வங்கி விளக்கம் அளித்துள்ளது.

தாங்கள் அளிக்கும் இத்தொகை மூலம் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய துறையினருக்கான ஊதியம், மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவற்றை உக்ரைன் அரசு வழங்க முடியும் எனவும் இதுதவிர இங்கிலாந்து, டென்மார்க், லாத்வியா, லித்துவேனியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள நிவாரணத் தொகைகளை தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com