உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல்: இலங்கை அரசு தகவல்

உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல்: இலங்கை அரசு தகவல்
உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல்: இலங்கை அரசு தகவல்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கி விரைவில் 400 மில்லியன் டாலர்களை விடுவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எண்ணெய், எரிவாயு, உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாத காலத்துக்கும் மேலாக தற்போது ஆட்சியில் உள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக்கோரி பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க:இலங்கை: இரவில் டார்ச்சை ஒளிரச் செய்து கிளர்ச்சி போராட்டம் - பிரதமர் வீடு முற்றுகை 

இலங்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக ஏற்கனவே பதவியில் இருந்த பல அமைச்சர்கள் பதவி விலகியுள்ள சூழலில், தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நாடுகளிடம் உதவியை கோரியுள்ள இலங்கை, தற்போது உலக வங்கியிடம் இருந்தும் நிதியுதவியை பெற முயற்சி எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com