இன்று உலகக் கலை நாள்! - எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

இன்று உலகக் கலை நாள்! - எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

இன்று உலகக் கலை நாள்! - எதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
Published on

கலைஞர்களுக்கு முடிவு என்பது இருந்தாலும் கலைகளுக்கு முடிவு என்பதே கிடையாது. காலம் கடந்தும் கலை வாழ்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கலைக்கென இன்று உலகக் கலை நாள் கொண்டாடப்பட்டது வருகிறது. உணர்ச்சி மற்றும் மன ஓட்டங்களை எளிதில் கடத்தும் கருவிதான் கலை. அதுவும் இத்தாலிய கலைஞரான லியொனார்டோ டா வின்சியின் பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

“மக்களை ஒன்றிணைக்கவும், ஊக்கமளிக்கவும் கலை ஒரு சக்தியாக இயங்குகிறது. அது இன்றைய கொரோனா சூழலிலும் வெளிபடுகிறது. இந்த நெருக்கடியான சூழலிலும் மக்கள் கலையினால் ஒன்றாக இணைய முடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது” என யுனெஸ்கோ பொது இயக்குனர் Audrey Azoulay தெரிவித்துள்ளார். 

“நமக்கு ஊக்கம் கொடுத்து வரும் கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புபவர்கள் என்னுடன் இணையலாம்” என யுனெஸ்கோ பொது செயலாளர் அன்டோனியா குர்டெராஸ் தெரிவித்துள்ளார். 

கலையையும், கலைஞர்களையும் போற்றுவோம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com