அமெரிக்கா: 30 வருட வளர்ப்பு... உலகிலேயே நீளமான நகத்தை வெட்டிக்கொண்ட பெண்!

அமெரிக்கா: 30 வருட வளர்ப்பு... உலகிலேயே நீளமான நகத்தை வெட்டிக்கொண்ட பெண்!

அமெரிக்கா: 30 வருட வளர்ப்பு... உலகிலேயே நீளமான நகத்தை வெட்டிக்கொண்ட பெண்!
Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக வளர்த்துவந்த தனது நகத்தை வெட்டிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கின்னஸ் உலக சாதனை பக்கத்தை பின்பற்றுபவர்கள் உலகளவில் பலவிதமான சாதனைகளைப் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சற்று வித்தியாசமானது. உலகிலேயே மிக நீளமான கைவிரல் நகங்களைகளைக் கொண்ட பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக தான் ஆசையாக வளர்த்து பராமரித்து வந்த அந்த நகங்களை வெட்டியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்துவரும் அயன்னா வில்லியம்ஸ் என்ற பெண் 28 வருடங்களுக்கும் மேலாக தனது கைநகங்களை வெட்டாமல் உடையாமல் பராமரித்து வந்துள்ளார். தற்போது டாக்டர் ஆலிசன் என்ற சரும பராமரிப்பு நிபுணரிடம் சென்று தனது நகங்களை ஒரு எலக்ட்ரிக் மெஷினால் வெட்டி எடுத்துள்ளார்.

அயன்னாவின் நகம் மற்றும், வெட்டுவதற்கு முன், பின் ஆகிய படங்களை கின்னஸ் உலக சாதனை பக்கம் பகிர்ந்துள்ளது. அயன்னாவின் நகங்களின் நீளம் கிட்டத்தட்ட 733.55 செ.மீ என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 24.7 அடி என கணக்கிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com