லெபனானில் பெண்கள் மணக்கோலத்தில் போராட்டம்

லெபனானில் பெண்கள் மணக்கோலத்தில் போராட்டம்

லெபனானில் பெண்கள் மணக்கோலத்தில் போராட்டம்
Published on

பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவை மேலும் வலுப்படுத்தக் கோரி லெபனான் நாட்டு தலைமையகத்திற்கு எதிரே அந்நாட்டு பெண்கள் மணப்பெண் கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

லெபனான் நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களையே திருமணம் செய்து கொள்வதன் மூலம் தப்பித்து வந்தனர். சட்‌டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வதை தடுக்கும் விதமாக அந்நாட்டு அரசு சமீபத்தில் புதிதாக ஒரு சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்திற்கு வரவேற்பு தெரிவிக்கும் பெண்கள், அதில் மேலும் சில வலுவான ஷரத்துகளை சேர்க்க வேண்டும் எ‌ன வலியுறுத்துகின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட பெண்கள் மணக்கோலத்தில் நிற்பது போன்று உடையணிந்து அந்நாட்டு தலைமையகம் முன்பு அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com